புதுக்குடியிருப்பு ,ஆனந்தபுரத்தில் தங்கம் தேடிய பொலிஸாருக்கு கிடைத்தது தேனீர்க்குவளை!

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் ஒரு தொகை தங்கத்தை நிலத்தில் புதைத்து வைத்துள்ளதாக பொலிஸார் நேற்று புதன்கிழமை பிற்பகல் அவ்விடத்தில் அகழ்வுப் பணியை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் அங்கே தங்கம் எதுவும் மீட்க்கப்படாத நிலையில் பொலிஸார் தேனீர் குவளை ஒன்றை மட்டும் மீட்டுள்ளனர்.

அகழ்ந்த கிடங்குகள் நேற்று இரவு மூடப்பட்ட நிலையில் பொலிஸார் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை புதுகுடியிருப்பு வள்ளிபுனம் பகுதியிலும் தங்கம் புதைந்து கிடப்பதாக கூறி பொலிஸார் இதே நாள் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கிருந்தும் தங்கம் எதுவும் மீட்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பகின்றது.

குறித்த இரு பகுதி அகழ்வுகளும் முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அகழப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் சம்பவ இடங்களில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like