இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்: நான்கு மீனவர்கள் படுகாயம்

இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்கள் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகப்பட்டினம் அருகே வேதாரண்யத்திலுள்ள ஆறுகாட்டுத் துறையை சேரந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

இந்நிலையி்ல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது, கட்டையால் தாக்கியுள்ளனர்.

இத் தாக்குதலில் குமாரசாமி, செந்தில், அமுதகுமார், கலைமணி இந்த நான்கு மீனவர்களும் படுகாயமடைந்துள்ளனர். அங்கிருந்து கரை திரும்பிய அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like