பெண்களை ஏமாற்றும் இந்த தரகரை தெரிந்தால் அறிவியுங்கள்

திருமணம் முடித்து தருவதாக கூறி, பெண் ஒருவரிடம் இருந்து பண மோசடி செய்த தரகரை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தேகநபர் குறித்த பெண்ணிடம் இருந்து 18.65 மில்லியன் மோசடி செய்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

எல்பிட்டிய, ஹிப்பன்கந்த பகுதியை சேர்ந்த சக்ரவர்த்தி காமினி டி சில்வா என்ற 57 வயதுடைய நபரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமணம் செய்வதற்கு நல்ல மணமகனை பார்த்து தருவதாக கூறி குறித்த நபர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

எனவே, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

ஆகவே, சந்தேகநபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றால் 077 38 90 959 அல்து 077 078 00 71 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கூறியுள்ளனர்.

You might also like