44ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்
கிளிநொச்சியில், பன்னங்கண்டி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 44ஆவது நாளாகவும் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டம் தமக்கான காணி உரிமங்களை வழங்கவும், வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட வசதிகளை வழங்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டம் பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், தீர்வு கிட்டும் வரையில் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.