வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் 29 முதிரை மரக்குற்றிகள் மடக்கி பிடிப்பு : சாரதி உட்பட இருவர் கைது

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் பார ஊர்தியில் மறைத்து கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகள் இன்று (04.05.2017) காலை 7.30 மணியளவில்  மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மடு காட்டுப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்செல்லப்பட இருந்த நிலையில் ஈச்சங்குள பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து பொலிஸ் பரிசோதகர் சுபாஷ் ஆரியரட்ன தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் விஜயரத்ன , பொலிஸ் சாஜன் அமரசிங்க சமந்த,பொலிஸ் கான்ஷ்டபில்களான  நிர்பான், விதான, சந்திரவம்ச, நிஷால், பிரதீப், கருணாரட்ன, கண்ணங்கர, பாரதிராஜா, பீரிஸ், மதுர, அஜந்தன் ஆகியோர் புதுக்குளம் பகுதியில் வைத்து பாரஊர்தியை வழி மறித்து சோதனை இட்ட போது சுமார் 10 லட்சம் பெறுமதி வாய்ந்த 29 முதிரை  மரக்குற்றிகள் எருவிற்குள் மறைத்து கொண்டு செல்ல இருந்ததை கண்டறிந்துகொண்டனர்.

இதனையடுத்து பாரஊர்தியில் இருந்த  ஜோன்ஜெராட் (வயது.37) , ராசரட்ணம் (வயது.  48) சாரதி உட்பட   இருவரை கைது செய்துள்ள ஈச்சங்குளம் பொலிஸார் நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

 

You might also like