வவுனியாவில் சுகாதார தொண்டர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் இன்று 04.05.2017 பிற்பகல்1.00 மணியிலிருந்து பிராந்தி வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து குடும்பநல உத்தியோகத்தர்களின் உதவியாளர்களாகவும், சுகாதாபரிசோதகர்களுக்கு உதவியாளர்களாகவும் நாங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றோம் இன்று வரை எமக்கு நிரந்த நியமனம்  வழங்கப்படவில்லை

எனவே  நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இன்று  முதல் தொடர் போராட்டத்தினை மேற்கொள்வதாகவும் நிரந்தர நியமணம் கிடைக்கும் வரை போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

You might also like