வவுனியாவில் சுவாரிஸ்யம் : கிணற்றை காணவில்லையென முறைப்பாடு (படங்கள்)

 

வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவ தளபதி கொப்பாகடுவவின் சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குழாய்கிணறு ஒன்றை சில வருடங்களாக காணவில்லையென வவுனியா நகரசபை செயலாளரான  ஆர்.தயாபரன் அவர்களிடம் சமூக நலன்விரும்பி ஒருவரால் முறைப்பாடொன்று இடப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

கடந்த பல வருடங்களுக்கு முன்பு வவுனியா நகரசபையினால் பொதுமக்கள் பாவனைக்காக வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவ தளபதி கொப்பாகடுவ சிலைக்கருகில் குழாய்க்கிணறு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.  காலப்போக்கில் அந்த கிணறு இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.

இவ் விடயம் தொடர்பாக  நகரசபை செயலாளரை தொடர்பு கொண்ட பொழுது சம்பவம் உண்யென்றும் இதன் அருகிலிருக்கும் வியாபார நிலையங்களில் யாரேனும் ஒருவர் இதனை இரகசிய முறையில் பாவிக்கின்றார்களா? என்ற சந்தேகம் கொள்வதாகவும் எனினும் இது சட்டவிரோத குற்றமெனவும் தாம் இதற்குரிய சட்ட நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும் பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழாய்கிணற்றை மறைத்து  தமது சொந்த பாவனைக்கு பயன்படுத்துபவர்கள் மீது உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுப்பதுடன் நஷ்ட ஈட்டையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென முறைப்பாடுட்டவர் தெரிவித்துள்ளார்.

You might also like