கிளிநொச்சியில் 74ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 74ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்களும், அரசில் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இது தவிர வெவ்வேறு கிராமிய அமைப்புக்களும் இவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like