நான்காவது நாளாகவும் தொடரும் இரணைதீவு மக்களின் போராட்டம்

கிளிநொச்சி, இரணைதீவு மக்கள் நான்காவது நாளாகவும் இன்று தமது போராட்டத்தினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த போராட்டம் பூர்வீக இடத்திற்குச் செல்லவும், அங்கு தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு கோரி இரணைதீவு மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மக்கள் கடந்த 26 ஆண்டுகளாக தமது சொந்த நிலத்தில் வாழ்வதற்கும், தொழில் செய்வதற்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில், முழங்காவில் இரணைமாதா நகர் கடற்கரைப்பகுதியில் கடந்த முதலாம் திகதி முதல் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் இந்த போராட்டத்தின் வடிவத்தினை மாற்றி உண்ணாவிரதப் போராட்டமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like