வழி மறித்து வாகனம் ஒன்றை கொள்ளையடித்த இனம்தெரியாத நபர்கள்

வெலிவேரிய பொது மயானத்திற்கு அருகில் வைத்து வேன் ஒன்று நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வேன், 5.1 மில்லியன் மதிப்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடுவலையிலிருந்து Belummahara நோக்கி பயணித்த வேன் ஒன்றை, மோட்டார் வாகனத்தில் வந்த குழுவினர் வழி மறித்துள்ளனர்.

பின்னர், கொள்ளையர்கள் வேன் சாரதியின் கையை கட்டி வேனில் கூட்டிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து, சபுகஸ்கந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் வேன் சாரதி மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய சாரதியே இவ்வாறு சபுகஸ்கந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொள்ளையர்கள் தொடர்பில் இதுவரையில் எந்த தகவல்களும் கிடைக்கப் பெறாத நிலையில், சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like