கிளிநொச்சியில் போக்குவரத்து சீரின்மையால் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் சீரான போக்குவரத்து வசதிகள் இன்மையால் மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் பெரும் சிரமத்தினை எதிர் நோக்கி வருகின்றனர்.

கிளிநொச்சி, புதுமுறிப்பு, கோணாவில், பன்னங்கண்டி, மருதநகர், கட்டைக்காடு, ஆனைவிழுந்தான், கல்லாறு, மற்றும் நாகேந்திரபுரம் போன்ற பகுதிகளில் வாழும் மக்களே இவ்வாறான அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஆரம்ப கல்வியை நிறைவு செய்து இடைநிலை மற்றும் உயர்கல்வியை தொடர்வதற்கென வேறு பிரதேசங்களை நோக்கி மாணவர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் சீரின்மையால் சிரமங்களை எதிர்கொள்ளும் அதேவேளை மாணவர்கள் கல்வியை விட்டு இடைவிலகும் நிலையும் காணப்படுகிறது.

You might also like