நாளை அரச மருத்துவமனை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : தனியார் வைத்தியசாலையில் இலவச சேவை

நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள மருத்துவர்களின் சேவை புறக்கணிப்பு காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் இலவசமாக சிகிச்சைகளை அளிக்க தீர்மானித்துள்ளதாக மாலபே நெவில் பெர்னாண்டோ தனியார் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், நாளைய தினம் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு மக்களுக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நாடு தழுவிய சேவை புறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகள் உட்பல பல மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும்.

இதன் காரணமாக தமது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் இலவசமாக சிகிச்சைகளை வழங்க நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை தீர்மானித்துள்ளது.

You might also like