70ஆவது நாளாக போராட்ட களத்தில் இருக்கின்றோம் முடிவு என்ன முருகா?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று (04) 70 ஆவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.

குறித்த உறவுகள் இன்றைய தினம் கந்தசாமி ஆலயத்திற்குச் சென்று வழிப்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளதுடன், பின்னர் தேங்காய் உடைத்தும் இந்த போராட்டத்திற்கு ஒரு முடிவினை தருமாறும் முருகனிடம் கேட்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

கடந்த 70 நாட்களாக வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களது உறவுகளின் வெளிப்படுத்தலை வலியுறுத்தியும்,

அரசியல் கைதிகளை விடுதலை செய், அவசரகாலச்சட்டத்தினை இரத்துச் செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like