கிளிநொச்சி மாவட்டத்தின் சமூக சேவைகளுக்காக 4 இலட்சத்து 86 ஆயிரத்து 200 ரூபா நிதி அன்பளிப்பு!

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினால், மாவட்டத்தின் சமூகசேவை செயற்பாடுகளுக்காக 4 இலட்சத்து 86 ஆயிரத்து 200 ரூபா நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட பாடசாலைகளின் கல்வி மேம்பாடு , உள்ளூர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் முகமாக வெளிநாடு செல்வதற்கான அன்பளிப்பு , மருத்துவம் , அனர்த்தங்களுக்கான நிதியுதவி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார நிகழ்வுகளுக்கான அன்பளிப்பு என குறித்த நிதிகள், சங்க கூட்டத்தின் தீர்மானங்களுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் சமூகசேவைகளுக்காக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் அக்கறை செலுத்தி அதனை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் கூறியுள்ளார்.

You might also like