யாழில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை

யாழ். மட்டுவில் பகுதியில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த இளைஞர் வீட்டின் கூரையில் இன்று (04) காலை 6:30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் மட்டுவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கஜதீபன் ( வயது 31) என ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இளைஞர் தற்கொலை செய்து கொண்டமைக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like