சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள் 31ம் திகதி வரையில் சமர்ப்பிக்கப்பட முடியும்

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் 31ம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் ஏற்கனவே அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் பத்திரிகைகளில் பிரசூரிக்கப்பட்டுள்ளன.

இந்த மாதம் 31ம் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ம் திகதி முதல் 21ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

You might also like