கிளிநொச்சியில் 75ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 75ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தங்களது போராட்டத்திற்கு இன்று வரையில் எவ்வித தீர்வுகளும் கிடைக்கவில்லை என அங்கு போராடும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மன ரீதியாகவும் மற்றும் உடல் ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like