துப்பாக்கி குண்டுகளுக்கும் செல்வீச்சுக்கும் கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா??

வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் நேற்று 04.05.2017  பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து இன்று (05.05.2017) இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.

யுத்த்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் கடமையாற்றி பல உயிர்களை காப்பாற்றிய எங்களுக்கு நியமனம் இல்லையா? , நீண்ட காலமாக சேவை ஆற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? , வெயில் மழை பாராமல் ஊதியம் இல்லாமல் கடமை ஆற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? ? , வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்திய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? என பல்வேறு பதாதைகளை தாங்கிய வன்னம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை போராட்டத்தினை  தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

You might also like