தீர்வு கோரி 45ஆவது நாளாவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 45ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டம் தமது குடியிருப்பு காணிக்கான உரிமத்தினை வழங்க வேண்டும் மற்றும் வீட்டுத்திட்டங்களை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து வருகிறது.

இது தொடர்பில் போராட்டகாரர்கள் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான சரஸ்வதி கமம் பகுதியில் 1990ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வருகின்றோம்.

இருப்பினும் இது நாள் வரையில் நாம் குடியிருக்கும் நிலத்திற்கான உரிமம் எமக்கு வழங்கப்படவில்லை.

அத்துடன் நாங்கள் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலேயே எமது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றோம் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

You might also like