பணிகளுக்கு இன்று சமூகமளிக்காதவர்களுக்கு வேலை பறிபோகும் நிலை

அரசாங்க மருத்துவ சம்மேளனம் இன்று அழைப்பு விடுத்துள்ள பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவு வழங்கும் புகையிரத திணைக்களத்தின் ஒப்பந்த அடிப்படை பணியாளர்களுக்கு பணிவிலக்கல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதன்படி இன்று பணிகளுக்கு வராத ஒப்பந்த அடிப்படை லோக்கொமோட்டிவ் சாரதிகள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோர் பணிகளில் இருந்து தாமாகவே விலகியதாக கருதப்படுவர் என்று புகையிரத திணைக்களம் எச்சரித்துள்ளது.

மாலபே தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக அரசாங்க மருத்துவ சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு பல்வேறு துறை தொழிற்சங்கங்களும் தமது ஆதரவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like