நோயின் தாக்கத்தை தாங்க முடியாமல் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பில் வயோதிபரொருவர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

77 வயது மதிக்க தக்க 3 பிள்ளைகளின் தந்தையான செல்லையா விநாயகமூர்த்தி என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமம் (சி) வலயத்தில் வசித்து வந்த குறித்த நபர் நோயின் தாக்கம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like