ஐந்தாவது நாளாக தொடரும் இரணைதீவு மக்களின் போராட்டம்

கிளிநொச்சி, இரணைதீவு மக்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.

குறித்த மக்கள் தமது பூர்வீக இடத்திற்கு செல்லவும், அங்கு தங்கி நின்று தொழில் செய்யவும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.

கிராம மட்டத்திலும் மற்றும் பூநகரிப் பிரதேச செயலகம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களிலும் இந்த விடயம் தொடர்பான கோரிக்கைகள் பலமுறை முன்வைக்கப்பட்டது.

எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தீர்வு தருமாறு கோரி கடந்த முதலாம் திகதி முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like