வவுனியா தாண்டிக்குளத்தில் பட்டா விபத்து : ஒருவர் படுகாயம்

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (05.05.2017) மாலை 4.20மணியளவில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தாண்டிக்குளத்திலிருந்து சாஸ்த்திரிகூழாங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது சாஸ்த்திரிகூழாங்குளத்திலிந்து தாண்டிக்குளம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பட்டா ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி மின்சார கம்பத்துடனும் மோதியது.

இவ் விபத்தில் பட்டா ரக வாகனத்தில் பின்பகுதியிலிருந்து பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You might also like