யாழில் மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியர்! பாடசாலையில் பெற்றோர் தகராறு

யாழ். அனலைதீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆங்கில பட ஆசிரியர் ஒருவர் அதே பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த மாணவியின் பெற்றோருக்கும், பாடசாலை ஆசிரியர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை முடிந்தவுடன் குறித்த மாணவி பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். பெற்றோரும் உறவினர்களும் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பிற ஆசிரியர்களுடனும் முரண்பட்டுள்ளனர்

இதையடுத்து குறித்த ஆசிரியரை ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் பெற்றோரும், ஆசிரியர்களும் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்ந்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் ஆசிரியரை நேற்று (04) முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், தமக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் கற்பிப்பதற்குச் செல்ல முடியாது என தெரிவித்துள்ளனர்.

இதனால் பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like