யாழ் மற்றும் வவுனியாவில் இடம்பெற்ற சிறீ சபாரத்தினம் அவர்களின் அஞ்சலி நிகழ்வு

சிறீரெலோ கட்சியினால் ஒழுங்கமைக்கப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் திரு சிறீ சபாரத்தினம் அவர்களின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (05/05/2017) மாலை 5.30 மணியளவில் யாழிலும் வவுனியாவிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

மேலும் இன்று மாலை 5.30மணியளவில்  திரு சபாரத்தினம் அவர்கள் சுட்டு கொல்லப்பட்ட இடமாக கருதபடும் கோண்டவில் கிழக்கு கோகுலவீதி அன்னங்கை தோட்டவெளியில் சிறீ ரெலோ இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ். செந்தூரன் தலைமையில் யாழில் நினைவு கூறப்பட்டது இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னால் போராளிகள் மூத்த உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு இறந்த தம் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்

இதேவேளை வவுனியா மன்னார் வீதி குருமன்காட்டில் அமைந்துள்ள சிறீரெலோ கட்சியின் காரியாலயத்திலும் இன்று மாலை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது இந்நிகழ்வானது தமிழீழ விடுதலை இயக்கத்தின்(telo) மூத்த உறுப்பினரும் படுகொலைசெய்யப்பட்ட தலைவர் திரு சபாரத்தினம் அவர்களின் மெய்ப்பாதுகாவலருமான திரு அஜித் அவர்கள் தலமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகள் மற்றும் போராளிகளான திரு சூரி,திரு அல்பிரட்,திரு சாப் ஆகியோருடன் சிறீரெலோ இளைஞர் ஒன்றிய தலைவர் திரு கார்த்திக் செயலாளர் திரு தினேஸ் மற்றும் இளைஞர் ஒன்றிய உறுப்பினர்களுடன் தாய்மடி நற்பணி நிதியத்தின் தலைவி பிரேமிளா கற்குழி கிராம மாதர் சங்க தலைவியும் சமூக சேவகியுமான திருமதி லோஜி ஆகியோர் கலந்துகொண்டு அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்

மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய திரு அஜித் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தலைவர் திரு சபாரத்தினம் அவர்களின் வரலாறு பற்றியும் அவரது சிறப்புகள் பற்றியும் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

You might also like