அரசாங்கத்துக்கு நான்கு நாள் அவகாசம்: அரச மருத்துவர்கள்

நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அரசாங்க மருத்துவ சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மருத்துவ சம்மேளன செயலாளர் வைத்திய கலாநிதி நவீன் டி சொய்ஸா இதனை கூறியுள்ளார்.

சைட்டம் விடயத்தில் அரசாங்கம் தீர்வு ஒன்றுக்கு வராமை காரணமாகவே இதனை தாம் ஏற்பாடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சைட்டம் விடயத்துக்கு நான்கு நாட்களுக்குள் தீர்வு எட்டப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இல்லையேல் தீவிரமான போராட்டத்தை சந்திக்கவேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஏதிர்வரும் 9ஆம் திகதியன்று கூடவுள்ள சம்மேளனத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வது தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் மருத்துவ சம்மேளன செயலாளர் வைத்திய கலாநிதி நவீன் டி சொய்ஸா குறிப்பிட்டுள்ளார்.

You might also like