பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரம் – தாயின் அதிரடி நடவடிக்கை

15 மாத மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன் தினம் மாலை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் வனத்தவிலில் வசிக்கும் ஒரு 24 வயதானவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னர் போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகவும், பின்னர் மேசனாக வேலைவாய்ப்பு ஒன்றை பெற்றதாவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபரின் மனைவி வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது கணவர் தனது மகளை உடல் ரீதியாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்வதாக சந்தேக நபரின் 22 வயதுடைய மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பலாத்காரத்திற்கு உட்பட்ட மகளை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கையை வனத்தவில்லு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like