இந்த பாலிவுட் படத்தால் ஓறங்கட்டப்படுமா பாகுபலி 2 பாக்ஸ் ஆபிஸ் சாதனை

இதுநாள் வரை அனைவரும் பாகுபலி 2 வசூல் சாதனையை பற்றி தான் வியப்பாக பேசியிருப்பார்கள். ஆனால் இப்போது கதையே வேறு. அதாவது அமீர்கான் நடித்த டங்கல் படம் எப்போதோ இந்தியாவில் வெளியாகி ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.

இந்நிலையில் இப்படம் சீன மொழியில் மொத்தம் 9000 திரையரங்குகளுக்கு மேல் அண்மையில் வெளியாகி இருந்தது. தற்போத இந்த படம் ஒரே நாளில் ரூ. 13.2 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

இதற்கு முன் வெளியான இவரது PK படம் முதல் நாளில் ரூ. 5.7 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் பாகுபலி 2 வசூல் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

You might also like