வன்னியின் பெரும் போர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்ட கிளிநொச்சி மகாவித்தியாலயம்

வன்னியின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் இரு பெரும் கல்லூரிகளான கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் இடையிலான கடினப்பந்கு சுற்றுப்போட்டி நேற்று(05) ஆரம்பமானது.

வருடம் தோறும் நடைபெறும் இந்த கடினப்பந்து சுற்றுப்போட்டி ஏழாவது தடவையாக இந்த வருடம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

நாணைய சுழற்சியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து அணித்தலைவரால் களத்தடுப்பு தீர்மானிக்கப்பட்டது.

துடுப்பெடுத்தாட தயாராகிய புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அணி 43.3 பந்து பரிமாற்றங்களில் அனைத்து விக்கற் இழப்புக்களிற்கும் மொத்தமாக 107 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 45 பந்து பரிமாற்றங்களில் 9 விக்கற் இழப்புக்களிற்கு மொத்தமாக 208 ஓட்டங்களை பெற்றது.

அதே வேளை தமது வெற்றி இலக்குக்கு ஓட்டங்கள் போதுமென அணித்தலைவரால் தீர்மானிக்கப்பட்டு துடுப்பாட்டத்தை இடை நடுவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிடம் கொடுத்தது.

தமது இரண்டாவது இனிக்ஸ் இணை தொடர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட நிலையில், வெளிச்சம் போதவில்லை என அணித்தலைவரால் விண்ணப்பம் செய்யப்பட்டதை அடுத்து நேற்றையதின ஆட்டம் நிறுத்தப்பட்டது

மீண்டும் இன்று காலை ஒன்பது மணிக்கு தமது ஆட்டத்தை ஆரம்பித்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி 24 பந்து பரிமாற்றங்களில் அனைத்து விக்கற்றுகளையும் இழந்த நிலையில் மொத்தமாக 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மகாவித்தியாலய அணி ஒரு இனிக்ஸ் ஆலும் அறுபது ஓட்டங்களினாலும் ஏழாவது வன்னியின் பெரும் போர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like