பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையின் சடலம் ஆற்றிலிருந்து மீட்பு

நுவரெலியாவில் பிறந்து இரண்டு நாட்களேயான பச்சிளம் குழந்தையின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரட்ணகிரி தோட்ட பிரதேசத்தில் இருந்து மேல்கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தும் ஆற்றிலிருந்தே குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் எந்த தகவலும் வெளிவராத நிலையில், பொலிஸார் பாதுகாப்பு பணிகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

குழந்தையின் சடலம் பிரேதபரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like