கிளிநொச்சியில் மழை: மக்கள் மகிழ்ச்சியில்

கிளிநொச்சியில் கடந்த நாட்களில் அதிகளவான வெப்பம் நிலவி வந்த நிலையில் நேற்று(05) தொடக்கம் அங்கு மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் கிளிநொச்சி அக்கராயன்குளம், ஆனைவிழுந்தான், வன்னேரி, ஸ்கந்தபுரம், உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்துள்ளதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதே வேளை அக்கராயன், ஆனைவிழுந்தான் பிரதான வீதிகள் புணரமைப்பு செய்யப்படாமையின் காரணமாக இவ்வாறான காலநிலையில் வீதிகளில் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த வீதிகள் பல வருட காலங்களாக புணரமைப்பு செய்யப்படவில்லை எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து இந்த வீதியை புணரமைப்பு செய்து தர வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like