மருத்துவர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுப்பு

நாடு முழுவதும் நேற்று சேவை புறக்கணிப்பில் ஈடுபட்ட மருத்துவர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்பபடவில்லை என தெரியவருகிறது.

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சில தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று நாடு முழுவதும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.

இதனால், மருத்துவர்களுக்கு எரிபொருள் நிரப்பவதை எரிபொருள் நிலையங்கள் நிறுத்தியிருந்தன.மருத்துவ இலச்சினை பொறிக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு எரிபொருள் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எரிபொருளை நிரப்பாது திருப்பிய அனுப்பியிருந்தனர்.

இது தொடர்பான காணொளி ஒன்றும் முகநூல் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு எரிபொருள் நிரப்பபட மாட்டாது என அறிவிப்பும் பலகையும் வைக்கப்பட்டிருந்தன.

You might also like