பனிஸ் சாப்பிட்டதால் பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்

சிலாபத்தில் பனிஸ் தொண்டையில் சிக்கியதால் மூன்று வயது குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை வேளையில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தைக்கு காலை உணவாக பனிஸ் வழங்கப்பட்டுள்ளது.

பனிஸின் சிறு பகுதி தொண்டையில் சிக்கியதால் குழந்தை சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் குழந்தையை பெற்றோர், சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like