கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மது உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் சட்ட விரோதமாக மது உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தருமபுரம் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், 06 பரல் கோடா மற்றும் மது உற்பத்தி உபகரணம் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

You might also like