நிதிமோசடி தடுப்பு பிரிவின் மீது குற்றச்சாட்டு: உயர் அதிகாரியின் பதவி பறிபோகிறது?
நிதி மோசடிக்கு எதிரான குற்றச்சாட்டு காரணமாக இருந்ததாக கூறப்படும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்த பிரிவில் இருந்து நீக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார்.
குறித்த விசாரணைகள், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் பிரதம மந்திரியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் பணிப்புரையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆரம்ப விசாரணைகளின்படி குறித்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று தெரியவந்துள்ளது. இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டை எழுப்பிய நிதிமோசடி பிரிவின் அதிகாரி அல்லது
பொலிஸ் உயரதிகாரி ஒருவர் பதவி நீக்கத்துக்கு உள்ளாவார் என்று எதிர்ப்பார்ப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது