இவர் தான் உலகிலேயே குண்டான ஆண்: எவ்வளவு எடை தெரியுமா?

உலகிலேயே குண்டான ஆணாக இருக்கும் நபருக்கு உடல் எடையை குறைக்க இரைப்பை பைபாஸ் ஆப்ரேஷனை மருத்துவர்கள் மேற்கொள்ளவுள்ளார்கள்.

மெக்சிகோவை சேர்ந்தவர் Juan Pedro Franco (32), இவரின் எடை 590 கிலோவாகும்.

உலகின் குண்டான ஆண் என்ற பெயருக்கு சொந்தக்காரரான Juan அதிக எடை காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக படுக்கையை விட்டு நகரவில்லை.

இந்நிலையில் உடல் எடையை குறைத்தே தீர வேண்டும் என சபதம் எடுத்த Juan அதற்காக தனியார் மருத்துவமனையின் உதவியை நாடியுள்ளார்.

பின்னர் கடுமையான டயட் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைபடி செயல்பட்டதில் Juan நான்கு மாதத்தில் 170 கிலோ எடை குறைந்துள்ளார்.

மேலும், அதிகளவில் Juanன் உடல் எடையை குறைக்க மருத்துவர்கள் வரும் 9ஆம் திகதி அவருக்கு இரைப்பை பைபாஸ் ஆப்ரேஷன் செய்யவுள்ளனர்.

இது குறித்து Juan கூறுகையில், என்னை போல் குண்டாக இருப்பவர்கள் எதற்கும் பயப்படாமல் மருத்துவ உதவியை நாட வேண்டும் என கூறியுள்ளார்.

இது குறித்து புகழ்பெற்ற Mayo மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், இரைப்பை பைபாஸ் என்பது பெரிய ஆப்ரேஷன் ஆகும்.

இதை செய்யும் போது அதிக ரத்த போக்கும், நோய் தொற்று, நுரையீரல் மற்றும் சுவாச கோளாறு பிரச்சனைகளும் சில சமயம் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே எகிப்தை சேர்ந்த உலகின் குண்டு பெண் Eman-க்கு இந்த ஆப்ரேஷன் மூலம் வெற்றிகரமாக உடல் எடை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like