வவுனியாவில் உலக செஞ்சுலுவை தினத்தினை முன்னிட்டு தாகசாந்தி நிகழ்வு
வவுனியா உலக செஞ்சுலுவையும் செம்பிறையும் தினத்தினை முன்னிட்டு இலங்கை செஞ்சுலுவை சங்கத்தின் தலைவர் அன்டன் புனிதநாயகம் அவர்களின் தலமையில் இன்று (08.05.2017) காலை 8.00மணி தொடக்கம் மதியம் 1.00மணி வரை சுகாதார சேவைகள் பணிமணைக்கு முன்பாக தாகசாந்தி நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது இலங்கை செங்சுலுவை சங்கத்திற்கு புதிய உறுப்பினர்கள் பதிவு மேற்கொள்ளப்பட்டதுடன் இரத்த தானத்திற்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை செஞ்சுலுவை சங்கத்தின் வவுனியா கிளை உத்தியோகத்தர்கள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
வவுனியாவில் கடும் வெப்பநிலை நிலவும் இந் நிலையில் இவர்களின் இச் சேவை சிறப்பானது என பொதுமக்கள் தெரிவித்தனர்.