யாழ். திருநெல்வேலி சந்தியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்து

யாழ். திருநெல்வேலி சந்தியில் உள்ள கடை ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் ஒழுக்கின் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை திருநெல்வேலி சந்தைக்கு வந்தவர்கள் கடை எரிவதைக் கண்டு கடை உரிமையாளருக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும், உரிமையாளர் வருவதற்கு முன்னர் கடை பாதியளவில் எரிந்து நாசமாகியுள்ளது.

சுமார் 5 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like