வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய கட்டிடம் சுகாதார அமைச்சரினால் திறந்து வைப்பு

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பிரதான மண்டபம் இன்று 06-01-2017 மதியம் 2.00மணியளவில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது

பாடசாலையின் அதிபர் திருமதி. கி.நந்தபாலன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் கே.ராதாகிருஸ்ணன், வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராசா, மற்றும் அசிரியர் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பாடசாலை வரவேற்பு நடன இறுவட்டு வடக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

You might also like