வவுனியா இ.போ.ச நேரக்கணிப்பாளரை பருத்தித்துறை டிப்போ சாரதி தாக்க முயற்சி

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (08.05.2017) மதியம் 2.30மணியளவில் நேரக்கணிப்பாளர் காரியாலயத்தில் வைத்து நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் முயற்சியோன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

பருத்தித்துறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து (பருத்தித்துறை டிப்போ) வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூராக தரித்து நின்றது. பேரூந்தினை வேறு இடத்தில் தரித்து நிறுத்துமாறு சாரதிக்கு வவுனியா இ.போ.ச நேரக்கணிப்பாளர் உத்தரவிட்ட போது. நேரக்கணிப்பாளரின் வார்த்தையினை மதிக்காது. அவ்விடத்திலிலேயே பேரூந்தினை தரித்து விட்டு சென்று விட்டார்.

உடனடியாக நேரக்கணிப்பாளர் இ.போ.ச பருத்தித்துறை பேரூந்தினை எடுத்து போக்குவரத்துக்கு எவ்வித இடையூறு இன்றி தரித்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பருத்தித்துறை பேரூந்தின் சாரதி நேரக்கணிப்பாளரை தாகாத முறையில் பேசியதுடன் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளவும் முயற்சித்தார்.

அருகில் நின்ற இ.போ.ச ஊழியர்களால் இவ் பிரச்சனை சுகுகமான நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

எனினும் இவ்விடயம் தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்படவில்லை

You might also like