ஞாயிறு தினங்களில் பகுதி நேர வகுப்புகளுக்கு 2 மணி வரை தடை

ஞாயிறு தினங்களில் தனியார் பகுதி நேர வகுப்புகளை பிற்பகல் 2 மணி வரை தடை செய்யும் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஞாயிறு தினங்களில் அறநெறி வகுப்புகள் கட்டாயமாக்கப்படும் யோசனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹபரணை சினமன் லொஜ் ஹொட்டலில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற 33வது முதலமைச்சர்கள் மாநாட்டில் இந்த யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

You might also like