மன்னாரில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காணவில்லை!

மன்னார் – எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

4 பிள்ளைகளின் தந்தையான ரி.யேசு மரியதாஸ் (62) என்பவர் மன நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும், கடந்த 2ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் குறித்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

அவர் காணமல் போன சந்தர்ப்பத்தில் கறுப்பு நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற டீ சேட் அணிந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0232222934 மற்றும் 0773817516 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மனைவி தெரிவித்துள்ளனர்.

You might also like