நாட்டின் பல பாகங்களிலும் மழை வீழ்ச்சி;முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை

நாட்டின் பல பாகங்களிலும் மழை வீழ்ச்சி பதிவாகி வரும் நிலையில், முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பினால் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக வெப்பநிலை காரணமாக காய்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளன. மேலும் எஞ்சியுள்ள மரக்கறி செடி,கொடிகளில் வெயில் கால நோய் பரவியுள்ளது.

கடந்த வருடம் மழை வீழ்ச்சி குறைவான காரணத்தினால் காலபோக நெற்செய்கையில் அதிகமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளோம். இந்த நிலையிலேயே மரக்கறித் தோட்டங்களும் அழிவடைந்துள்ளன என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்கள் அனைவரும் அரிசி மற்றும் மரக்கறி வகைகளை சந்தையில் அதிக விலைகொடுத்து பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like