கண்டாவளை சின்னத்துண்டுப்பிள்ளையார் நற்பணி மன்றத்தினரால் கிளிநொச்சி கல்வி நிலையம்

இன்றைய தினம் கிளிநொச்சி கண்டாவளை சின்னத்துண்டுப்பிள்ளையார் நற்பணி மன்றத்தினரால் கண்டாவளை புலம்பெயர் அன்பர்களின் அனுசரணையுடன் கண்டாவளை கிராம மாணவர்களின் கல்விசார் நலன் கருதி அமைக்கப்பட்ட விநாயகர் கல்வி நிலையத்திணை இன்றைய தினம் வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ சு. பசுபதிப்பிள்ளை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் நீண்ட காலமாக ஒரு தனியார் கல்வி நிலையம் இல்லாத குறை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனியார் கல்வி நிலையங்களுக்காக நீண்ட தூரம் பயணம் செல்லும் மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

You might also like