கல்வி முன்னேற்றம் தொடர்பாக கிளிநொச்சியில் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்தி செயலணியின் கல்வி முன்னேற்றம் தொடர்பான மாதாந்த திறந்த கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 10ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட கல்வி சேவைகளில் வழங்குதல் மற்றும் பெறுதலில் உள்ள தடைகள், சவால்கள் தொடர்பில் கலந்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநல வைத்திய அதிகாரி வே.ஜெகரூபன் சிறப்புரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதில் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்தி செயலணியினர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like