க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஓர் அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை தற்போது வழங்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இது வரையில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் தமது விண்ணப்பங்களை கூடிய விரைவில் அனுப்பி வைக்குமாறு அதிபர்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்த திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like