வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் புதிய அதிபரை வரவேற்ற கல்விச்சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாக விளங்கும் வட்டக்கச்சி மத்திய கல்லூரிக்கு புதிய அதிபராக தருமபுரம் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் சவேரி பூலோகராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

தருமபுரம் மகாவித்தியாலயத்தில் அதிபராக இருந்து மாணவர்களினதும் கல்விச் சமூகத்தினதும் அன்பையும், நன்மதிப்பையும் பெற்ற இவர், தனது கல்விச்சேவைகளுக்கான மேற்படிப்பை கடந்தவருடம் நிறைவு செய்தபின்னர் தற்போது வட்டக்கச்சி மத்திய கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது கடமைகளை அண்மையில் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்ட அதிபரை பாடசாலைக் கல்விச்சமூகமும், மாணவர்கள், பெற்றோர், பழையமாணவர்கள் என அனைவரும் இணைந்து வரவேற்றிருந்தனர்.

இதேவேளை, இராமநாதபுரம் மகாவித்தியாலய அதிபர் சுப்பிரமணியம் நடராசா அண்மையில் ஓய்வுப்பெற்ற நிலையில், குறித்த பதவி வெற்றிடத்திற்கு வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் மனுவேல் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like