மோடியின் இலங்கை விஜயம்! கொழும்புக்கு வந்த சிறப்பு உலங்கு வானூர்திகள்

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு சிறப்பு உலங்கு வானூர்திகள் நான்கு கொழும்புக்கு வருகை தந்துள்ளன.

இந்திய பிரதமரின் பாதுகாப்பு அணியில் இருக்கும் எம்.ஐ17 ரக உலங்கு வானூர்திகள் நான்கே நேற்று கொழும்புக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பாதுகாப்பு வழங்குவதற்காக புலனாய்வு அதிகாரிகள் ஏற்கனவே கொழும்புக்கு வருகை தந்துள்ள நிலையில் சிறப்பு உலங்கு வானூர்திகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், நேற்று அதிகாலை 49 பேர் கொண்ட சிறப்பு குழுவினருடன் டெல்லியில் இருந்து புறப்பட்ட உலங்கு வானூர்திகள் பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்புக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் குறித்த நான்கு சிறப்பு உலங்கு வானூர்திகளும் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like