தென்கொரியா செல்லும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தொழில்வாய்ப்பை பெற்று தென்கொரியா செல்லும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.

தென் கொரியா செல்லும் இலங்கையர்களிடம் இருந்து அறிவிடப்படும் 5 லட்சம் ரூபா, உடன் அமுலாகும் வகையில் இனி அறவிடப்படமாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவின் ஆலோசனைக்கு அமைய இந்த அறவீடு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் சுமார் 26 ஆயிரம் இலங்கையர்கள் பணிபுரிகின்ற நிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 629 பேர் தென்கொரியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

You might also like