வெகு சிறப்பாக இடம்பெற்ற கனகாம்பிகை அம்மன் ஆலய தேர்த்திருவிழா

கிளிநொச்சி வரலாற்று சிறப்புமிக்க கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிலையில் காலை விசேட பூஜைகள் நடைபெற்று வசந்தமண்டபத்தில் அம்மனுக்கும் ஏனைய தேரேறும் பரிவாரங்களுக்கும் பூஜைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து தேரடிக்கு பிள்ளையார், முருகன், அம்மன் ஆகிய பரிவார மூர்த்திகளைக் கொண்டு வரப்பட்டு அங்கும் பூஜைகள் நடைபெற்றன. இதன்போது பக்த அடியார்கள் பக்தியுடன் வடம் பிடித்து இழுத்துச்சென்றுள்ளனர்.

கிளிநொச்சியில் மூன்று சித்திரைத்தேரை தன்னகத்தே கொண்ட ஓரே ஆலயமாக விளங்குகின்ற கனகாம்பிகை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், பக்த அடியவர்கள் காவடிகள், அங்கப்பிரதட்சணம், பாற்காவடிகள் என தங்களின் நேர்த்திக்கடன்களை செய்துள்ளனர்.

You might also like